search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராஜ்சிங் சவுகான்"

    பாஜக தலைவர்களான சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்துள்ளது. #BjP #NationalVicePresident #ShivrajSinghChouhan #RamanSingh #VasundharaRaje
    புதுடெல்லி:

    சமீபத்தில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியில் இருந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ம.பி., ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.



    இந்நிலையில், சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை பாஜக தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #BjP #NationalVicePresident #ShivrajSinghChouhan #RamanSingh #VasundharaRaje
    ம.பி. மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75 சதவித மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. #MadhyaPradeshelection #bjpelectionmanifesto

    போபால்:

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, முதல்- மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோர் இதை வெளியிட்டனர்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்து. பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    ஏழைகளுக்கு இலவச கல்வி வசதி அளிக்கப்படும். 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75 சதவித மதிப் பெண்களுக்கு மேல் பெறும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும்.

    மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றம் அடையும் வகையில் ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் மற்றும் சுயமாக தொழில் முனையும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் துறை திட்டங்கள் செயல் படுத்தப்படும். 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.40 ஆயிரம் கோடிக்கு கடன் வழங்கப்படும். சாகுபடி நிலப்பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 80 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். #MadhyaPradeshelection #bjpelection manifesto

    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 42 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MPAssemblyPolls #Congress
    போபால்:

    230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.

    மறுபுறம் காங்கிரசும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பிரசார வியூகம் அமைத்து செயல்படுகிறது. 

    தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 70 முதல் 80 பேருக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.

    இந்நிலையில், 57 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, 42 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்க தயாராக உள்ளது. 42 எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என நிர்வாகி ஒருவர் கூறினார். சரியான காரணம் எதுவும் இல்லாமல் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பதை மாநில தலைவர் கமல் நாத் விரும்பவில்லை. 

    71 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MPAssemblyPolls #Congress
    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ்நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP #MadhyaPradeshAssemblyElection
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜக. ஆட்சி நடந்து வருகிறது.

    அம்மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று சமீபத்தில் சிவோட்டர் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் இணைந்து வார்ரூம் ஸ்ட்ரடெஜிஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தின. அந்த சர்வே முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    அந்த கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜ.க. 142 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் 77 தொகுதியிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

    2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 166 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை 24 இடங்கள் குறைந்துவிடும் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 20 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


    தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 44 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    முதல் மந்திரியாக யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் சிவராஜ் சிங்சவுகானை தேர்வு செய்துள்ளனர். காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை 17 சதவீதம், திக்விஜய்சிங்கை 25 சதவீதம், கமல்நாத்தை 6 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

    மத்திய பிரதேசம் போல சத்தீஸ்கரிலும் ராமன்சிங் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  #BJP #MadhyaPradeshAssemblyElection #Congress
    ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    போபால்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றனர். இந்த அணியில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்கான் கிரார் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தையில் பங்கு பெற்று இந்தியாவுக்கு வெள்ளி வென்று தந்த முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்த அணியில் இடம் பிடித்த முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    ×